டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெற்ற பின்னர் இந்திய வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்துக்கு அதிக லைக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் அதிக லைக்குகள் பெற்ற இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஆனார் விராட் கோலி.
சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் பல அசைக்கமுடியாத சாதனைகளை படைத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அதனை முத்தமிடுவது போலவும், அணியின் குழுப் புகைப்படங்களயும் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு 1 கோடியே 64 லட்சத்துக்கும் அதிமான லைக்குகள் பதிவாகியுள்ளன. விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 26 கோடிக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர்.
மேலும், அந்தப் பதிவில், “இதைவிட சிறந்த நாளைக் கனவில்கூட கண்டிருக்க முடியாது. கடவுள் மிகப் பெரியவர், நன்றியுடன் தலை வணங்குகிறேன். இறுதியாக நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம். ஜெய்ஹிந்த்..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்பட்ட பதிவு, வேகமான 10 லட்சம் லைக்குகள், அதிவேக 50 லட்சம் லைக்குகள், ஆசியாவிலேயே அதிவேக 50 லட்சம் லைக்குகள், ஆசியாவில் அதிகம் பின்தொடர்பவர்கள் போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார் விராட் கோலி.
இதற்கு முன்னதாக நடிகை கியாரா அத்வானியின் திருமணப் பதிவுக்கு 1 கோடியே 62 லட்சம் லைக்குகள் வந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.