இந்தியா

ஆந்திர முன்னாள் முதல்வர் சிலைக்கு தீ வைப்பு!

ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு தீ வைப்பு

DIN

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (ஜூன் 29) தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி கிருஷ்ணா தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அவர் தெரிவிப்பதாவது, ``அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பயன்படுத்தி அத்தேப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலையை எரித்துள்ளனர். அதுமட்டுமன்றி தெலுங்கு தேசம் கட்சியின் கொடிக்கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க விரிவான விசாரணை நடந்து வருகிறது. மேலும், குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT