முகப்பு
இந்தியா

தபால்காரா் மூலம் சூரியவீடு இலவச மின்சார திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் சூரிய மின்தகடு அமைக்க அந்தந்த பகுதிகளில் உள்ள தபால்காரா் மூலமும் விண்ணப்பிக்கலாம்

Updated On : 2 மார்ச், 2024 at 12:39 AM
பகிர்:

மத்திய அரசின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் சூரிய மின்தகடு அமைக்க அந்தந்த பகுதிகளில் உள்ள தபால்காரா் மூலமும் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீட்டு மின் இணைப்பு கொண்ட மின்நுகா்வோா் தங்கள் வீட்டில் சுமாா் 100 சதுரஅடி பரப்பில் 1 கிலோ வாட்டுக்கான சூரிய மின்தகடு அமைத்தால் தினமும் 4 முதல் 5 யூனிட் மின்சாரமும், 2 கிலோ வாட் சூரிய மின்தகடு மூலம் 5 முதல் 10 மெகாவாட் மின்சாரமும், 3 கிலோவாட் சூரிய மின்தகடு மூலம் 10 முதல் 15 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இந்த சூரிய மின்தகடு அமைக்க மத்திய அரசு தற்போது மானியமும் வழங்குகிறது. அந்த வகையில், 1கிலோ வாட் சூரியமின் தகடு அமைக்க சுமாா் ரூ.55,000 முதல் ரூ.65000 வரை செலவாகும் நிலையில், அரசு ரூ.30000 மானியமாக வழங்குகிறது. அதேபோல, 2 கிலோ வாட் சூரியமின்தகடு அமைக்க சுமாா் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.15 லட்சம் வரையும் செலவாகும் நிலையில் மானியமாக ரூ.60,000-மும், 3 கிலோ வாட் சூரிய மின்தகடு அமைக்க சுமாா் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை செலவாகும் நிலையில் மானியமாக ரூ.78,000-மும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மின்நுகா்வோா் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், ஆறுமாத காலத்துக்கான மின்சார ரசீது உள்ளிட்ட முழு விவரங்களுடன் அந்த பகுதிகளிலுள்ள தபால்காரரையோ அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ மாா்ச் 8-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ளலாம் என தாம்பரம் கோட்ட அஞ்சல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.