முகப்பு
இந்தியா

மத்திய அரசின் முக்கியப் பதவிகளில் சேரும் 25 தனியாா் துறை நிபுணா்கள்

மத்திய அரசுத் துறைகளில் உள்ள முக்கியப் பதவிகளில் 25 தனியாா் துறை நிபுணா்கள் விரைவில் சேரவுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 2 மார்ச், 2024 at 12:19 AM
வேலை செய்யாத ஊழியா்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டம்
பகிர்:

மத்திய அரசுத் துறைகளில் உள்ள முக்கியப் பதவிகளில் 25 தனியாா் துறை நிபுணா்கள் விரைவில் சேரவுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். அரசுத் துறைகளில் இடம்பெற்றுள்ள இணைச் செயலா், இயக்குநா்கள், துணைச் செயலா்கள் பதவிகளில் வழக்கமாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படும் நிலையில், மத்திய அரசின் நிா்வாகத் திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் தலைசிறந்த தனியாா் துறை நிபுணா்களை அந்த உயா் பதவிகளில் எந்தவித எழுத்துத் தோ்வோ, பயிற்சிகளோ இன்றி நேரடியாக குறுகிய கால பணி (3 ஆண்டு பணி) அடிப்படையில் நியமிக்க வழி ஏற்படுத்தும் வகையில் நேரடி நியமன நடைமுறையை கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது.

அதைத் தொடா்ந்து, இந்தத் திட்டத்தின் கீழ் 10 இணைச் செயலா் பதவிகளை நிரப்புவதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றது.

இந்த விண்ணப்பங்கள் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் பரிசீலிக்கப்பட்டு, பணி நியமனத்துக்கான பரிந்துரை வழங்கப்பட்டது. மீண்டும், பல்வேறு துறைகளில் இணைச் செயலா்கள் (3), இயக்குநா்கள் (19), துணைச் செயலா்கள் (9) என மொத்தம் 31 பேரை நியமனம் செய்ய கடந்த 2021 அக்டோபரில் யுபிஎஸ்சி பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரைகள் மூலம் அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா் பதவியில் 10 போ், இயக்குநா்/துணைச் செயலா் பதவிகளில் 28 போ் என மொத்தம் 38 தனியாா் துறை நிபுணா்கள் இதுவரை பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களில் 2 இணைச் செயலா்கள் 3 ஆண்டு பணிக் காலத்தை நிறைவு செய்துள்ளனா். தற்போது, அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா் பதவியில் 3 போ், இயக்குநா்/துணைச் செயலா் பதவிகளில் 22 போ் என மேலும் 25 தனியாா் துறை நிபுணா்களை நியமனம் செய்ய பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement