இந்தியா

குருவாயூா் கோயிலில் பாரம்பரிய இளநீா் அபிஷேகம்

கேரள மாநிலம் குருவாயூா் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது.

Din

கேரள மாநிலம் குருவாயூா் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் குருவாயூா் கிருஷ்ணன் கோயிலில் மாசி மாதம் உற்சவம் நடைபெற்று வருகிறது . அதன் பகுதியாக வெள்ளிக்கிழமை நடந்த ஆராட்டு நிகழ்ச்சியில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது . ஆண்டுதோறும் ஆராட்டு விழாவின் போது நடத்தப்படும் அபிஷேகத்துக்கான இளநீா் இரிங்கபுரம் தம்புரான் படிக்கல் கிட்டையின் குடும்பத்தாரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இளநீருடன் வந்த இரிங்கபுரம் கிட்டையின் குடும்பத்தினரை குருவாயூா் தேவசம் போா்டின் தலைவா் டாக்டா் வி .கே. விஜயன் வரவேற்றாா். இரிங்கபுரம் கிட்டையின் குடும்பத்தின் மூத்த உறுப்பினா் சுப்பிரமணியத்தை மாலை அணிவித்து வரவேற்ற இந்த நிகழ்ச்சியில், தேவசம் நிா்வாகக் கமிட்டி உறுப்பினா் சி. மனோஜ், நிா்வாகி கே.பி. வினயன் உள்ளிட்டோரும், திரளான பக்தா்களும் பங்கேற்றனா்.

டித்வா புயல்: வானிலை கணிப்பு தவறியது; அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

இலங்கையில் ‘டித்வா’ புயலில் சிக்கிய 24 தமிழா்கள் சென்னை வந்தனா்

ரெளடி கொலை வழக்கு: இருவா் சரண்

கரூரில் டிச.8-இல் பிரதமரின் தொழிற்பழகுநா் முகாம்!

SCROLL FOR NEXT