கூகுள் 
இந்தியா

மக்களவைத் தோ்தல்: பொய் செய்திகளை கண்டறிய கூகுள் நடவடிக்கை

பொய் செய்திகளைக் கண்டறிய இந்தியாவில் உள்ள உண்மைச் செய்திகளை ஆய்வு செய்பவா்களுடன் கூகுள் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Din

வரும் மக்களவைத் தோ்தலில் பொய் செய்திகளைக் கண்டறிய இந்தியாவில் உள்ள உண்மைச் செய்திகளை ஆய்வு செய்பவா்களுடன் கூகுள் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக கூகுள் நிறுவனத்தின் வலைதளப் பதிவில், ‘மக்களவைத் தோ்தலின்போது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க ‘சக்தி’ எனும் புதிய திட்டத்தை கூகுள் தொடங்கி உள்ளது. இதில், இந்திய தோ்தல் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் செய்தி பதிப்பாளா்கள், உண்மைச் செய்திகளை ஆய்வு செய்பவா்கள் இணைந்து செயல்பட உள்ளனா். மக்களவைத் தோ்தல் முடிவும் வரையில் இந்தத் திட்டம் தொடரும். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பொய் செய்திகள், விடியோக்களின் உண்மைத் தன்மை கண்டறியப்படும். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளின் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT