இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் 
இந்தியா

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் பாதிப்பு!

ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்பட்ட அன்று புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதாக சோம்நாத் தகவல்.

DIN

இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்துக்கு இரைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்திய தினத்தன்று இரைப்பை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பேட்டி ஒன்றில் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்திய அன்று புற்றுநோய்க்கான சில அறிகுறிகள் தென்பட்டன. அப்போது அதுபற்றி சரியாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த முழு புரிதல் எனக்கு இல்லை.

மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி, ஸ்கேன் செய்தேன். ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்திய அன்று இரைப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி எனக்கு மட்டுமின்றி, எனது குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கீமோதெரபி அறுவை சிகிச்சை மூலம் சோம்நாத் வயிற்றில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

தற்போது புற்றுநோயில் இருந்து முழுவதுமாக குணமடைந்து பணியை தொடர்வதாகவும், வழக்கமான பரிசோதனைக்கு மருத்துவமனை சென்று வருவதாகவும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT