பிரகாஷ்ராஜ்  
இந்தியா

மணிப்பூர் மக்கள், விவசாயிகள் உங்கள் குடும்பமா? மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

கடந்த இரண்டு நாள்களாக ‘மோடியின் குடும்பம்’ என்று எக்ஸ் தளத்தில் பாஜகவினர் பெயரை மாற்றி வருகின்றனர்.

DIN

‘மோடியின் குடும்பம்’ என்று பாஜக தலைவர்கள் எக்ஸ் தளத்தில் பெயர் மாற்றி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “ நரேந்திர மோடிக்கு குடும்பமே இல்லை, நீங்கள் ஹிந்துகூட இல்லை, ஹிந்து மதத்தினரின் தாய் இறந்தால், மொட்டை அடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் மொட்டை அடித்தீர்களா? சமூகத்தில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறீர்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “நாட்டின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் இன்று மோடி குடும்பத்தில் உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் அனைவரும் தங்களின் எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனச் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், “மணிப்பூர் மக்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் எல்லாம் உங்களின் குடும்பம்தானா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

அழகின் சம்மேளனம்... சமந்தா!

SCROLL FOR NEXT