வாரணாசியில் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள பதாகை  படம் | பிடிஐ
இந்தியா

”நாங்கள் மோடியின் குடும்பம்” - இல்லந்தோறும் வைக்கப்படும் பதாகைகள்

”நாங்கள் மோடியின் குடும்பம்” என்று எழுதப்பட்டுள்ள பதாகைகளை வாரணாசியிலுள்ள மக்கள் தங்கள் வீட்டு வாயிலின் முன்பு தொங்கவிட்டுள்ளனர்.

DIN

”நாங்கள் மோடியின் குடும்பம்” என்று எழுதப்பட்டுள்ள பதாகைகளை வாரணாசியிலுள்ள மக்கள் தங்கள் வீட்டு வாயிலின் முன்பு மக்கள் தொங்கவிட்டுள்ளனர்.

’பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை’ என்ற விமர்சனத்தை சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன் வைத்தார் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மீதான விமர்சனத்துக்கு பதிலடியாக, பாஜக தலைவர்கள் தொடங்கி அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் என பலரும் தங்கள் சமூக வலைதள சுயவிவரக்குறிப்பில் தங்கள் பெயர்களுக்கு பின் ‘மோடியின் குடும்பம்’ என்ற அடைமொழியை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக அவரது தொகுதியான, உத்தரப் பிரதேசத்திலுள்ள வாரணாசியை சேர்ந்த மக்கள் கைகோர்த்துள்ளனர்.

தங்கள் வீட்டு வாயிற்சுவரில் ”நாங்கள் மோடியின் குடும்பம்” என்று எழுதப்பட்டுள்ள பதாகைகளை வைக்கத் தொடங்கியுள்ளனர் வாரணாசிவாசிகள். இது தொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT