‘We 
இந்தியா

இந்தியக் குடியுரிமை பெற புதிய இணையதளம்!

இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

DIN

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் திங்கள்கிழமை மாலை அமலான நிலையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளால் தங்களது உரிமைகள் பறிபோகும் என வடகிழக்கு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகளை சந்தித்த சிஏஏ சட்டத்துக்கான விதிகளை மத்திய அரசு வெளியிட்ட நிலையில், நேற்று அமலுக்கு வந்தது.

டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குகின்றன. இந்த நிலையில், தகுதியான நபர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் முற்றிலும் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குடியுரிமை வேண்டுவோர் https:/indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT