Shahbaz Khan
Shahbaz Khan
இந்தியா

சமையல்காரர் மகளுக்கு அமெரிக்காவில் சட்ட முதுகலை படிக்க வாய்ப்பு!

PTI

கடின உழைப்பு நிச்சயம் வெற்றியைப் பெற்றுத்தரும் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் பிரக்யா. உச்ச நீதிமன்றத்தில் சமையல்காரராகப் பணியாற்றுபவரின் மகள் பிரக்யா. இன்று அமெரிக்காவில் சட்ட முதுகலைப் பயில உதவித்தொகை பெற்றுள்ளார்.

கல்வியில் நடந்த மிகப்பெரிய சாதனையாக, உச்ச நீதிமன்றத்தில் சமையல்காரராகப் பணியாற்றுபவரின் மகள் பிரக்யா, அமெரிக்காவில் சட்டப்படிப்பில் முதுகலைப் படிப்பதற்கான உதவித்தொகையை பெற்றுள்ளார்.

மிகப்பெரிய உச்சம்தொட்டிருக்கும் பிரக்யாவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் இதர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

அண்மையில், அமெரிக்காவில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில், முதுகலை சட்டம் பயில பிரக்யாவுக்கு அழைப்பு வந்திருந்தது. தற்போது, அமெரிக்காவில் சட்ட முதுகலை பயில்வதற்கான உதவித்தொகையையும் பிரக்யா பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற பாராட்டு விழா தொடர்பான விடியோ பிடிஐ-ல் வெளியாகியிருக்கிறது. பிரக்யாவின் தாய், தந்தைக்கும் பொன்னாடை போர்த்தி தலைமை நீதிபதி பாராட்டி கௌரவித்தார். பிரக்யாவின் தந்தை அஜய் குமார் சமல், உச்ச நீதிமன்றத்தில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய டி.ஒய். சந்திரசூட், இது எங்கள் அனைவருக்கும் பெருமைதரும் விஷயம் என்று புகழ்ந்தார்.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கையெழுத்திட்ட புத்தகத்தையும் பிரக்யாவுக்கு அவர் வழங்கி பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடியாத்தி! சம்யுக்தா மேனன்..

ராஜஸ்தான் பேட்டிங்; வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே!

ஜப்பானில் 6ஜி: மின்னல் வேகத்தில் தரவு பரிமாற்றம்!

போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் காத்திருங்கள்... சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு!

என்னை கைது செய்த பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது -கேஜரிவால்

SCROLL FOR NEXT