இந்தியா

திருவனந்தபுரம்: மோதும் மூன்று நட்சத்திர வேட்பாளர்கள்!

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 15 ஆண்டுகளாக காங்கிரஸின் சசி தரூர் உள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில தலைவர் பன்னியன் ரவீந்திரன் ஆகியோர் நேரடியாக களமிறங்குகின்றனர்.

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் மும்முனைப் போட்டியாக களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கேரள தலைநகரான திருவனந்தபுரம் தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக உள்ள சசி தரூரை மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

கடந்த 2009 முதல் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யாக இருக்கும் சசி தரூர், காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் பொறுப்பில் இருந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சசி தரூர் அளித்த பேசியதாவது:

“கடந்த 15 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மக்களுக்காக சேவையாற்றியுள்ளேன். அவர்களுக்கு என்னையும், எனது சேவைப் பற்றியும் தெரியும். தொகுதியில் ஏற்பட்ட அனைத்து முக்கிய பிரச்னைகளிலும் பங்கேற்றுள்ளேன்.

இந்த தொகுதியில் எப்போதும் மும்முனைப் போட்டி நிலவும். இடதுசாரிகள் வெற்றி பெற்ற தொகுதி இது. இரண்டு முறை இடதுசாரிகள் இங்கு வெற்றி பெற்றுள்ளனர். மேலும், கடந்த இரண்டு முறையும் பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஆகையால், இரண்டு வேட்பாளர்களும் சவாலாக இருப்பார்கள். மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

சசி தரூரை எதிர்த்து கேரளத்தை ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பன்னியன் ரவீந்தரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர், 2005 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“காங்கிரஸுக்கும் இடதுசாரிக்கும் இடையேதான் போட்டி. பாஜகவுக்கும் திருவனந்தபுரத்துக்கும் தொடர்பில்லை.” என்று பன்னியன் ரவீந்தரன் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் மத்திய இணையமைச்சராக உள்ள ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். கடந்த 2006 முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் இவர், முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

குஜராத்தில் பிறந்த ராஜீவ் சந்திரசேகரின் பெற்றோர்கள் கேரள மாநிலம் திருச்சூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து, கேரள அரசியலில் தீவிரம் காட்டி வரும் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் சசி தரூர் 4,16,131 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கும்மனம் ராஜசேகரன் 3,16,142 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட்டின் திவாகரன் 2,58,556 வாக்குகளும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT