தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் 
இந்தியா

நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

DIN

சென்னை: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நாடு முழுவதும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகளுக்கு இன்று காலை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாள்; வேட்பு மனுக்கள் மீது மார்ச் 28-ல் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அதன்பிறகு சுமார் 45 நாள்களுக்குப் பிறகு ஜூன் 4-ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: கோவையில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

பாஜக ஆா்ப்பாட்டம்: 103 போ் மீது வழக்குப் பதிவு

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமனம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா்

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT