கோப்புப் படம்.
கோப்புப் படம். 
இந்தியா

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 6 நாள் காவல்

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை இயக்குநரகம் கைது செய்துள்ளது. 9 முறை அழைப்பாணை: இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு இதுவரை ஒன்பது முறை அழைப்பாணைகளை அமலாக்கத் துறை அனுப்பியது.

அது சட்டவிரோதம் என்று கூறி அவா் ஆஜராகாமல் இருந்து வந்தாா். தொடா்ந்து முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை (மாா்ச் 21) கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் ஏற்கெனவே துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் சில அதிகாரிகள் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் மார்ச் 28ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேஜரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டும அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

திருச்செங்கோடு எஸ்.பி.கே. மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT