இந்தியா

இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு

இரட்டை இலையை முடக்கும்பட்சத்தில் வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும்: ஓபிஎஸ்

DIN

நமது சிறப்பு நிருபர்

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பிரமுகர் வா.புகழேந்தி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா அமர்வு கடந்த 14-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, மனுதாரர் புகழேந்தியிடம் புதிதாக ஒரு மனுவைப் பெற்று தேர்தல் ஆணைய சட்ட விதிமுறைகளின்படி அதிமுக பிரிவுகள் குறித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 15, 18, 19- ஆம் தேதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குவது தொடர்பாக புகழேந்தி மனு அளித்து, இது தொடர்பாக விரைவாக முடிவெடுக்க கோரினார்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகி வேட்புமனு பெறும் கடைசி நாள் நெருங்குவதை முன்னிட்டு தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு புகழேந்தி செவ்வாய்க்கிழமை வந்தார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியைச் சந்தித்து முறையிட்டார்.

பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறியதாவது: எங்களது மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருக்கிறது. வேட்புமனு மீது முடிவெடுக்க இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் ஒரு விவகாரத்தில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

அதிமுக விவகாரத்திலும் தகராறுக்குரிய கட்சி என்கிற கோப்பில் வைக்கப்பட்டுள்ளதால் அதுபோன்று முடிவெடுக்க வேண்டும். தற்போது முடிவெடுக்க அவகாசமில்லை என்பதால் சின்னத்தை முடக்க வேண்டும். ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இதற்கான உத்தரவையும் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி கே. பழனிசாமி) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் சின்னத்தை முடக்குவது சிறந்தது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT