இந்தியா

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

DIN

அமலாக்கத்துறை காவல் முடிந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை 7 நாள்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், இன்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து, தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய கேஜரிவால், இது அரசியல் சதி என்றும், இவர்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

கேஜரிவாலுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால், அவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT