மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
தனது மகளுக்கு பெயர் நியமத் கௌர் மான் என பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், இன்று தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பினர்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தனது மகளுக்கு நியமத் கௌர் மான் என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
வியாழக்கிழமை, மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டாக்டர். குர்பிரீத் கௌர், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இன்று தனது வீட்டுக்கு வந்த மனைவி மற்றும் மகளை அன்போடு வரவேற்ற பகவந்த் மான், குழந்தையை கையிலேந்தியபடி செய்தியாளர்களை சந்தித்தார்.
Advertisement
அப்போது அவர் பேசுகையில், இன்று எனது குடும்பத்துக்கும், எனது வாழ்விலும் மிகப்பெரிய நாள் என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் குருபிரீத் கவுர் உடன் பகவந்த் மானுக்கு 2022-ல் திருமணம் நடைபெற்றது. பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கும்போதே முதல்வருக்கு குழந்தை பிறப்பது இதுவே முதன்முறை. பகவந்த் மானுக்கு 51 வயதாகிறது. முந்தைய திருமணத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து பெற்ற பின்னர் குருபிரீத் கவுரை திருமணம் செய்துகொண்டார்.