இந்தியா

கோடைக்காலம்.. இன்றுமுதல் கதர் உடையில் அயோத்தி ராமர்!

300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் 4.25 அடி உயரத்தில் 5 வயதுடைய பால ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

DIN

கோடைக்காலத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலுள்ள மூலவர் சிலையான ஸ்ரீ பால ராமர் சிலைக்கு இன்றுமுதல் கதர் ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

5 வயதுடைய ராமரை சிலையாக வடித்துள்ளதால், கோடை காலத்தையொட்டி பால ராமருக்கு கையால் நெய்த பருத்தி ஆடைகளை அணிவித்து அலங்கரித்துள்ளதாக ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் (எக்ஸ்), கோட்டா மலர்களின் வாசத்துடன், இயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட கைகளால் நெய்த ஆடையைக் கொண்டு இன்று பிரபு (பால ராமர்) அலங்கரிக்கப்பட்டுள்ளார் என்று பதிவிடப்பட்டுள்ளது.

கோடைக்கால மாதங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி, கதர் ஆடைகள் அணிவிக்கும் முயற்சியை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது.

300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் 4.25 அடி உயரத்தில் 5 வயதுடைய பால ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் மொத்த எடை 1.5 டன். மைசூருவைச் சேர்ந்த அருண் யோகிராஜ் சிலையை செதுக்கியிருந்தார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் முன்னெச்சரிக்கை கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயில் வளாகத்தில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை, ஓய்வறை, போன்றவற்றுக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கோடை விடுமுறையில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயக்காரி... கீர்த்தி சுரேஷ்!

நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு,கனிமொழி சந்திப்பு! செய்திகள்: சில வரிகளில் | 19.8.25 | Dmk | BJP

மும்பையில் மோனோரயில் விபத்து: பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்!

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பு..! ரசிகர்கள் வருத்தம்!

முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்ற ஜெம் அரோமாடிக்ஸ்!

SCROLL FOR NEXT