இந்தியா

மின்கம்பத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; 2 பேர் காயம்

கார் ஓட்டுநர் மயங்கி விழுந்ததால், கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது.

DIN

மொராதாபாத் (உத்தரபிரதேசம்): உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள காந்த் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்கம்பத்தில் கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து மொரதாபாத் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சந்தீப் குமார் மீனா கூறுகையில், நள்ளிரவு 2 மணியளவில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வந்த வாகனம், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள காந்த் பகுதிக்கு அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மின்கம்பத்தில் மோதியது.

இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், இருவர் காயம் அடைந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கார் ஓட்டுநர் மயங்கி விழுந்ததால், கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் 4 பேர் பலியானதில் ஓட்டுநர் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் மீனா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

தில்லியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சீனாவின் ஆளுங்கட்சியினர் சந்திப்பு!

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

SCROLL FOR NEXT