இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் கோத்ரேஜ் நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொருளாவது நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என்று சொல்லும் அளவுக்கு சோப்பு முதல், பீரோ, வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்துத் தயாரிப்புகளிலும் முன்னணியில் விளங்கும் கோத்ரேஜ் குழுமம் இரண்டாக பிரிகிறது.
கடந்த 1897ஆம் ஆண்டு கோத்ரேஜ் நிறுவனத்தை ஆர்தேஷிர் கோத்ரேஜ் நிறுவி, சோப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் ரியல் எஸ்டேட் தொழில் வரை பல துறைகளில் சாதனை படைத்து வருகிறது.
தற்போது, ஆர்தேஷிர் கோத்ரேஜ் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு, இரண்டு குழுக்களாகப் பிரிகிறது. மூத்த சகோதரரின் பிள்ளைகள் ஒருபுறமும், இளையவரின் பிள்ளைகள் இன்னொரு பக்கமும் என ஒன்று ஆதி கோத்ரேஜ் - அவரது சகோதரர் நாதீர் கோத்தேஜ், மற்றொன்று ஜாம்ஷெட் கோத்ரேஜ், ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா என பிரிகிறது.
ஆதி கோத்தேஜ் பிரிவு 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கோத்ரேஜ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தங்களுடையதாக்கிக் கொள்கிறார்கள். அடுத்தப் பிரிவு பட்டியலிடப்படாத கோத்ரேஜ் அண்ட் பொயிஸ், அதன் துணை நிறுவனங்கள், மும்பையில் முக்கிய இடங்களை தங்கள் வசமாக்கியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.