மாதிரி படம் ENS
இந்தியா

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு என ரூ.6 லட்சம் மோசடி

DIN

இஸ்ரேலில் சில முகவர்களுடன் தொடர்பில் உள்ள, வெளிநாடுகளுக்கு மக்களை வேலைக்கு அனுப்புவதாக ஏமாற்றி வந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை தில்லி காவல்துறையினர் கைது செய்ததாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷர்மா என்பவர் இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவதாக 39 வயது பெண் ஒருவரை மோசடி செய்துள்ளார்.

இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அஞ்சு சேத்ரி என்பவரிடம் விசாரணை செய்ததன் மூலம் இப்படி ஒரு ஏமாற்றுவேலை நடந்திருப்பதை காவலர்கள் கண்டறிந்தனர்.

போலி ஆவணங்களை அந்த பெண் வைத்திருந்ததும் அவரின் உண்மையான பெயர் ஹெடல்பென், குஜராத்தைச் சார்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அதே பெண்ணிடம் இன்னொரு பெயரில் ஆதார் கார்டு இருந்துள்ளது.

மார்ச் 31 தில்லியில் இருந்து டெல் அவிவ் அனுப்பப்பட்ட ஹெடல்பென் அங்கிருந்த மீண்டும் இஸ்ரேல் அதிகாரிகளால் இந்தியா அனுப்பப்பட்டுள்ளார்.

ஹெடல்பென் விசாரணையில் தான் ரமேஷ் ஷர்மா என்பவரிடம் இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்வதற்கு ரூ.6 லட்சம் பணம் கொடுத்ததாக குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய இன்னொரு முகவர் நந்தா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் தலைமறைவாக இருந்ததாகவும் டிசிபி தெரிவித்தார். பின்னர் ரமேஷும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT