இந்தியா

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

ஆந்திரத்தில் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு

DIN

ஆந்திரப் பிரதேச மாநில மக்களின் மனதின் குரலைக் கேளுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ரேடியோவில் குரல் பதிவு செய்து அனுப்பினார் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா.

ஆந்திரத்தின் கடப்பா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஒய்.எஸ். சர்மிளா போட்டியிடுகிறார்.

ஆந்திரத்தில் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி (4ஆம் கட்டம்) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரததில் ஈடுபட்டார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவரும் கடப்பா தொகுதி வேட்பாளருமான ஒய்.எஸ். சர்மிளா,

ஆந்திர மாநிலத்தில் நுழைவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை. ஆந்திர மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில மக்களை பாஜக ஏமாற்றியுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது அக்கறை காட்டும் மோடி, நலத்திட்டங்கள் என வரும்போது ஆந்திரத்தை மறந்துவிடுகிறார்.

ஆந்திர மக்கள் முன்பு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறேன். தைரியம் இருந்தால் அதில் ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்பதை எழுத்துப்பூர்வமாக குறிப்பிட முடியுமா? என ஷர்மிளா கேள்வி எழுப்பினார்.

மேலும், மாநில மக்களின் மனதின் குரலைக் கேளுங்கள் மோடி என்று ரேடியோவில் குரல் பதிவு செய்து ஷர்மிளா அனுப்பிவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

நாய் கடித்தால் அலட்சியம் காட்ட வேண்டாம்! ஆட்சியா் அறிவுறுத்தல்!

புகழூா் அரசுப் பள்ளியில் போக்சோ குற்றங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT