இந்தியா

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

வாக்கு வங்கியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது என்றார் அமைச்சர் அமித் ஷா.

DIN

வாக்கு வங்கியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் கட்சி போராடி வருவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமித் ஷா, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என அனைவரும் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு அழைக்கப்பட்டனர்.

ஆனால், அவர்கள் யாரும் ராமர் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தங்களின் வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை தவிர்த்தனர் எனக் கூறினார்.

இஸ்லாமியர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி. தங்களின் வாக்கு வங்கியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

பகவான் ராமரைத் தவிர நாங்கள் வேறு யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. ராமர் கோயிலை மட்டுமின்றி, ஒளரங்கசீப்பால் அழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலையும் பிரதமர் மோடி மறு உருவாக்கம் செய்தார். இந்துக்களின் ஆன்மிக மையத்தை பிரதமர் மோடி காத்துள்ளார் என அமித் ஷா பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

ரௌடி கும்பல் போல செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ் தாக்கு

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

SCROLL FOR NEXT