மத்திய அமைச்சர் அமித் ஷா 
இந்தியா

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

ராகுல் காந்தியின் வாக்குறுதி சூரிய அஸ்தமனம் வரைகூட நீடிக்காது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

2024 மக்களவைத் தேர்தல் ராகுலுக்கும், மோடிக்கும் இடையேயான நேரடிப் போட்டி என்றும், வாக்கு வளர்ச்சிக்கும், வோட் ஜிஹாத்துக்கும் இடையேயான போட்டி என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் போங்கிர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய உத்தரவாதத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் சீன உத்தரவாதம் ஆகியவற்றுக்கு ​​இடையே இந்த தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் மூன்றும் முக்கோணக் கட்சிகள். இக்கட்சிகள் ராம நவமி ஊர்வலத்தை நடத்த அனுமதிக்கவில்லை.

இவர்கள் 'ஹைதராபாத் விடுதலை நாள்' (செப்டம்பர் 17) கொண்டாட அனுமதிக்கவில்லை, சிஏஏ-வை எதிர்க்கின்றனர். குரான் அடிப்படையில் தெலங்கானாவை ஆட்சி அமைக்க விரும்புகிறார்கள்.

மோடி சொன்னதைச் செய்கிறார். ராகுல்காந்தியின் உத்தரவாதங்கள் சூரிய அஸ்தமனம் வரைகூட நீடிக்காது.

ராமர் கோயில் கட்டுவதை 70 ஆண்டுகளாக காங்கிரஸ் தடுத்து நிறுத்தியது. ஆனால், மோடி, ஐந்தே ஆண்டுகளில் அவ்வழக்கில் வெற்றி பெற்று, சிலை பிரதிஷ்டை செய்தார் என்றார்.

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மே 13-ம் தேதி 4-ம் கட்டத் தேர்தலில் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜுன் 4-ம் தேதி நடக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

நித்ய கன்னி... மனு பாக்கர்!

SCROLL FOR NEXT