தில்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சில நாள்களுக்கு முன்பாக நாட்டின் தலைநகரில் 150-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புராரி மருத்துவமனை மற்றும் சஞ்சய் காந்தி மருத்துவமனை நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் எம்.கே.மீனா, “புராரி மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உள்ளூர் காவல்துறை, வெடிகுண்டு சோதனை பிரிவு மற்றும் மோப்ப நாய்கள் அந்த இடத்துக்கு விரைந்துள்ளன. மருத்துவமனையை சோதனையிட்டு வருகிறோம். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் காந்தி மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.