FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

மகாராஷ்டிர சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் பவன் கட்டடத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 13 மார்ச் 2026, 3:05 am IST
பகிர்:

மகாராஷ்டிர சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் பவன் கட்டடத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை நிகழ்வில் கலந்துகொள்ள 350 உறுப்பினா்கள் விதான் பவனுக்கு வந்திருந்த நிலையில், திடீரென அந்தக் கட்டடத்தை தகா்க்க வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்து மா்ம நபரிடம் இருந்து வியாழக்கிழமை மின்னஞ்சல் வந்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

Advertisement

Advertisement

கட்டடம் முழுவதும் காவல் துறையினா், மோப்ப நாய் உதவியுடனும், மெட்டா் டிடெக்டா் கருவி மூலமும் சோதனை நடத்தினா். இதில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. எனினும், மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பதைக் கண்டறியும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments