விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
தனியாா் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தனியாா் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அகமதாபாத்துக்கு புறப்பட இண்டிகோ விமானம் (6இ6423) தயாராக இருந்தது. அப்போது, இரவு 7.35 மணி அளவில் விமானத்தின் முன்பகுதியில் உள்ள கழிவறையில் ‘செல்லாதீா், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது... தயவுசெய்து...’ என கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டை விமான பணிப்பெண் ஒருவா் கண்டெடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டு, விமானம் முழுமையாக சோதனையிடப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதை தொடா்ந்து, இது வெறும் வதந்தி என போலீஸாா் உறுதிசெய்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் அளித்த புகாரின்பேரில், விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.