இந்தியா

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று(மே 12) திறக்கப்பட்டுள்ளது.

DIN

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு கோயில்களும் சார்தாம் என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோயில்கள் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் பக்தர்களின் தரிசனத்துக்கான திறக்கப்பட்டு, குளிர்காலம் தொடங்கும்போது கோயில்களின் நடை மூடப்படுகின்றது.

அதன்படி, கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய மூன்று கோயில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று(மே 12) காலை 6 மணிக்கு மேள தாளங்கள் முழங்க திறக்கப்பட்டது. நடை திறப்பு விழாவில் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேலும், சுவாமி தரிசத்திற்காக ஏராளமான பக்தர்கள் பத்ரிநாத் கோயிலில் குவிந்துள்ளனர்.

விஷ்ணு பகவானுக்குரிய இக்கோயில், வழக்கமாக குளிா்காலத்தையொட்டி சாத்தப்பட்டு, பின்னா் கோடை காலத்தின் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்காட்டில் கடும் குளிா், பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக இன்று தில்லி செல்கிறார் விஜய்!

தூத்துக்குடி டவுன் புதிய டிஎஸ்பி நியமனம்

அதிகரிக்கும் இணையவழி மோசடி: மாநகர காவல் ஆணையா் எச்சரிக்கை

பொங்கல்: தூத்துக்குடி சந்தையில் குவிந்த மக்கள்

SCROLL FOR NEXT