இந்தியா

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

சென்னையில் 99.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

DIN

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்பட்ட 2023-24ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில், இன்று பகல் 1 மணியளவில் பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 22.38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 20.95 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மொத்த மாணவ, மாணவிகளில் 93.60 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், சென்னையில் 99.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டை விட இந்தாண்டில் 0.48 சதவீத மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் கூடுதலா தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT