முகப்பு
பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா

பாகிஸ்தானின் அணுசக்தியை கண்டு அஞ்சும் எதிர்க்கட்சிகள்: மோடி

பாகிஸ்தானின் கையில் வளையல் அணிய வைப்போம் என்றார் மோடி.

இந்தியா

பாகிஸ்தானின் அணுசக்தியை கண்டு அஞ்சும் எதிர்க்கட்சிகள்: மோடி

பாகிஸ்தானின் கையில் வளையல் அணிய வைப்போம் என்றார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

பாகிஸ்தானிடம் உள்ள அணுசக்தியை கண்டு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பயப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக சாடியுள்ளார்.

பிகார் மாநிலம் முசாபர்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் குறித்து கடந்த வாரம் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

“பாகிஸ்தானுக்கும், அவர்களின் கனவான அணுசக்திகளை கண்டும் பயப்படும் தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்றால், அவர்களை அணிய வைப்போம். அவர்களிடம் உணவு தானியங்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால், அவர்களிடம் போதுமான வளையல்கள்கூட இல்லை என்பது இப்போது நான் அறிந்துகொண்டேன்.

ஆனால், பயங்கரவாதத்தில் பாகிஸ்தானுக்கு ‘கிளீன் சீட்’ கொடுத்து, துல்லிய தாக்குதல்(சர்ஜிகல் ஸ்ட்ரைக்) மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகளின் கோழைத்தனத்தை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர்களின் இடது கூட்டணிகள் நமது அணு ஆயுதங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பள்ளி பையில் இருந்து ரூ. 35 லட்சம் மட்டுமே அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. ஆனால், நாங்கள் பொறுப்பேற்ற பிறகு ரூ. 2,200 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதனை எடுத்துச் செல்ல 70 சிறிய லாரிகள் தேவைப்படும்.

வாரிசுகளை ஊக்குவிப்பதில் அக்கறை கொண்ட எதிரிகளை போன்று இல்லை நான். என்னிடம் வாரிசு இல்லை.

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியின் போது கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் செழித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சமூக நீதிக்காக போராடுகிறது. 60 சதவிகிதம் மத்திய அமைச்சர்கள் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளை சேர்ந்தவர்கள்.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாங்களாகவே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பாகிஸ்தான் கையில் வளையல் அணிந்திருக்கவில்லை, அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →