கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இந்தியாகங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!
வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு செய்தார்.
பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று(மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.
இதற்கு முன்னதாக, தச அஸ்வமேத காட் பகுதியில் கங்கை ஆற்றங்கரையில் பிரதமர் மோடி இன்று காலை வழிபாடு செய்தார்.
வாரணாசிக்கு திங்கள்கிழமை வந்த அவா், மாலையில் 6 கி.மீ. தொலைவுக்கு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக பிரமாண்டமான வாகனப் பேரணி நடத்தினாா்.
வாரணாசியில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தலின்போது (ஜூன் 1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.