ஜெ.பி. நட்டா 
இந்தியா

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் மோடி: ஜெ.பி. நட்டா

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி என்றார் ஜெ.பி. நட்டா.

DIN

பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய செயலாலர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் பாஜக மகளிரணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அவர்,

''நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவர் பிரதமர் மோடி. முதல் வெளியுறவுத் துறை பெண் அமைச்சரை நியமித்தது மோடிதான். அதோடு மட்டுமின்றி பாதுகாப்புத் துறையிலும் நிதித்துறையிலும் முதல்முறை பெண்ணை நியமித்த பெருமையும் மோடியையே சேரும்.

அவர், பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கியுள்ளார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கியுள்ளார். இது பெண்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பல பெண்களுக்கு நுரையீரல் சார்ந்து எழும் பிரச்னைகள் குறைந்துள்ளன'' எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

கண் ஜாடை... லட்சுமி பிரியா!

SCROLL FOR NEXT