18 ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 - ந் தேதி முதல் ஜுன் 1 - ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முறையே ஏப்ரல் 19, 26, மே 7 , 13 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்த நிலையில்,6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை (மே 20) ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பிகார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா 1 தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில்,நடிகர் ஷாருக்கான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பொறுப்புள்ள இந்திய குடிமக்கள் ஆகிய நாம் மகாராஷ்டிரத்தில் வரும் திங்கள்கிழமை (மே 20) வாக்களிக்க வேண்டும்.இந்தியர்களாகிய நமது கடமையை நிறைவேற்றுவோம் மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு வாக்களிப்போம்.நமது வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4 - ந் தேதி நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.