இயக்குநர் போனி கபூர் மற்றும் அவரது இளைய மகளான குஷி கபூர் இருவரும் மும்பையில் வாக்களித்தனர்.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மகளும், வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின் மகளான குஷி கபூர் அவரது தந்தையுடன் மும்பையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
இது தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.