மக்களவைத் தேர்தலில் 140 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது என சமாஜவாதி கட்சியின் தலைவரும் கன்னெளஜ் தொகுதி வேட்பாளருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசு பாகுபாடு காட்டுகிறது. இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல். 140 தொகுதிகள் கூட வெற்றி கிடைக்காத நிலையை மக்கள் அவர்களுக்கு ஏற்படுத்துவார்கள். 400க்கும் அதிகமான இடங்களில் பாஜக வீழ்த்தப்படும்.
தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய பாஜக அனுமதி அளித்தது. அதிருஷ்டவசமாக நான் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கீழ் இதுவரை 10க்கும் மேற்பட்டமுறை அரசுத் காலிப் பணியிடத் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் கசிந்துள்ளன. இதன்மூலம் மாநிலத்தில் மட்டும் 60 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேள்வித் தாள்களை கசியவிட்டவர்களின் உடமைகள் மீது புல்டோசரை ஏவினாரா அவர் (யோகி ஆதித்யநாத்) எனக் கேள்வி எழுப்பினார் அகிலேஷ் யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.