முகப்பு
இந்தியா

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்த வங்கதேச எம்.பி. மாயமானார்.

Updated On : 21 மே, 2024 at 12:49 PM
அன்வருல் அசிம் அனார்
பகிர்:

மருத்துவ சிகிச்சைக்கு வந்த வங்கதேசத்தின் எம்பியான அன்வருல் அசிம் அனார், சிகிச்சைக்கு பிறகு காணாமல் போனதாக கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”வங்கதேசத்தின் ஆளும் அவாமி லீக்கின் எம்பியான அன்வருல் அசிம் அனார், கடந்த மே 13 முதல் காணவில்லை.

அனார் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மே 12 ஆம் தேதி அன்று கொல்கத்தாவுக்கு வந்து, பாராநகரில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். மே 13 ஆம் தேதி ஒருவரைச் சந்திக்கச் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுபற்றி அவரது நண்பர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்” எனக் கூறினார்.

”கடந்த 8 நாட்களாக அனார் காணாமல் போயிருந்த நிலையில், அவர் புது தில்லிக்கு சென்றுவிட்டதாக அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவரின் தொலைபேசியிலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. நாங்கள் காவல்துறை மற்றும் உயரதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்” என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →