எனது தாய், ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் தங்கத்தால் செய்யப்பட்டவை என நினைத்திருந்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இரண்டு ஆஸ்கர், இரண்டு கிராம்மி, கோல்டன் குளோப் என ஏராளமான விருதுகளை வாரிக் குவித்திருக்கிறார்.
அண்மையில் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தனது மறைந்த தாய் கரீமா பேகம் பற்றிய பல்வேறு நினைவுகளையும் அவர் பகிர்ந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், தான் பெற்ற சர்வதேச விருதுகள் அனைத்தையும், தாயின் துபை வீட்டில்தான் வைத்திருந்தேன். அவர் அனைத்தையும் ஒரு டவளில் சுற்றித்தான் வைத்திருப்பதார். ஏனென்றால், அவை அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவை என்று அவர் நினைத்திருந்திருக்கிறார்.
அவர் மறைந்தபிறகு, அவரது அறைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த சர்வதேச விருதுகளை துபை ஃபிர்தாஸ் அரங்குக்குக் கொடுத்துவிட்டேன். பிர்தாஸ் அரங்கில் மிகச் சிறந்த காட்சிப் பெட்டகம் உள்ளது. சில விருதுகள் என்னிடம் வந்து சேரவேயில்லை. ஏனென்றால், அவை நினைவுப்பரிசு என்று திரைப்பட இயக்குநர்கள் கருதுகிறார்கள் என்றும் வெளிப்படையாகக் கூறியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.