புணேவில் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிய ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவலர்கள் தெரிவித்தனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புணேவில் இருந்து 140 கிமீ தொலைவில் உள்ள இந்த அணையில் செவ்வாய்க்கிழமை ஆறு பேர் சென்ற படகு திரும்பும்போது நீருக்குள் மூழ்கியது.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறை இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகு கவிழ்ந்ததில் சிக்கியவர்களில் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.