வாக்களித்தார் திரெளபதி முர்மு !
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தில்லியில் வாக்களித்துள்ளார்.
18 ஆம் மக்களவைக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதுதில்லி மக்களவை தொகுதியில் உள்ள அனைத்து மகளிர் வாக்குப்பதிவு நிலையத்தில் வாக்களித்தார்.
காலை 9 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்திற்கு வந்த திரெளபதி முர்மு பின்னர் வரிசையில் நின்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா வாக்குப்பதிவு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Advertisement
Advertisement
வாக்குப்பதிவு நிலையம் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களால் அலங்கரிப்பட்டிருந்து. ’பிங்க் பூத்’ என்னும் இந்த வாக்குப்பதிவு நிலையம் பெண் ஊழியர்களால் மட்டுமே நிர்வகிக்கபடுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை தனது எக்ஸ் வளைதளத்தில் கூறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.