இந்தியா

ராஜ்கோட் தீ விபத்து: எந்த அனுமதியும் இல்லாமல் இயங்கிய விளையாட்டு மையம்

DIN

ராஜ்கோட்டில் 27 பேரை பலிகொண்ட பொழுதுபோக்கு விளையாட்டு மையம் அரசின் எந்த அனுமதியும் பெறாமல் இயக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் பொழுதுபோக்கு விளையாட்டு மையம் உள்ளது. இங்கு சிறாா்கள் உள்பட ஏராளமானோா் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டுமானம் சரிந்தது.

தீ கொழுந்துவிட்டு எரிந்து அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், நிகழ்விடத்துக்கு தீயணைப்புத் துறையினா் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்து தொடா்பாக ராஜ்கோட் காவல் துறை உதவி ஆணையா் விநாயக் படேல் கூறுகையில், ‘விபத்தில் சிறாா்கள் உள்பட இதுவரை 27 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவா் யாா் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றாா். தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தீ விபத்து நடந்த விளையாட்டு மையம், அரசின் தடையில்லா சான்று பெறாமலேயே இயக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநகராட்சி, தீயணைப்புத்துறை ஆகியவற்றிடம் இருந்து தேவையான எந்த அனுமதியும் பெறவில்லை. மேலம் ஒரே ஒரு அவசர வழி மட்டுமே அங்கு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தீ விபத்து நடந்த பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT