அதிகப்படியான நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என தில்லி அமைச்சர் அதிதி இன்று (மே 28) எச்சரித்தார்.
தில்லியில் கோடை காலத்தையொட்டி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஆம் ஆத்மி அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போர்வெல் செயல்படும் நேரத்தை 16 மணி நேரத்தில் இருந்து 22 மணி நேரமாக உயர்த்தவும், லாரி மூலமாக தண்ணீர் விநியோகிக்கும் நேரத்தை உயர்த்தவும் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதில், தண்ணீர் வீணாக்கப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிதி, உங்கள் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதோ இல்லையோ, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைத்தவர்கள், அதனை அதிகமாக பயன்படுத்தி வீணாக்க வேண்டாம். தங்கள் கார்களை நேரடியாக பழுப்புகளைத் திறந்துவிட்டு கழுவ வேண்டாம். மோட்டார்கள் நிரம்பி வழிவது போன்றவை நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் முடிந்த அளவுக்கு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
இந்தப் பொது அறிவிப்பு பலன் அளிக்கவில்லை என்றால், அதிகப்படியாக பயன்படுத்தும் தண்ணீருக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.