இந்தியா

சர்வதேச பர்கர் தினம்: பெங்களூருவில் மட்டும் 60 லட்சம் ஆர்டர்கள்...!

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக, மும்பை 50 லட்சமும், தில்லியில் 32 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

DIN

பெங்களூருவில் கடந்த ஆண்டில் மட்டும் 60 லட்சத்துக்கும் அதிகமான பர்கர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது இந்தியாவின் பர்கர் தலைநகரமாக மாறியுள்ளது என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. சர்வதேச பர்கர் தினமான மே 28ஆம் தேதி , கடந்த ஆண்டில் கடைபிடிக்கப்பட்ட சமீபத்திய பர்கர் ஆர்டர் செய்த விவரங்களை பகிர்ந்துள்ளது.

பர்கர் ஆர்டர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 4 கோடி பர்கர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. சண்டீகரில் இருந்து பர்கர் பிரியர் ஒருவர் சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று பர்கர்கள் வீதம் ஸ்விக்கியில் 1146 பர்கர்களை ஆர்டர் செய்துள்ளார்.

அதிகமான ஆர்டர்களில் இரவு நேர உணவுக்காக 1.95 கோடியும், மதிய உணவுக்கு 96 லட்சமும், காலை நேர உணவுக்கு 74 லட்சத்துக்கும் அதிகமான பேர் பர்கரை ஆர்டர் செய்துள்ளனர் என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக, மும்பை 50 லட்சமும், தில்லியில் 32 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஃப்ரைஸ், கோக் ஆகியவை பர்கர்களுடன் சிறந்த தேர்வாக இருந்தன. அதே சமயம் சீஸ் ஸ்லைஸ், சீஸ் டிப் ஆகியவை மிகவும் பிரபலமான டாப்பிங்ஸாக வெளிப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமையன்று ஸ்விக்கி அதன் விரைவான வர்த்தக நிறுவனமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், 2,500 டன் மாம்பழங்களை விற்பனை செய்ததாகக் கூறியுள்ளது. மாம்பழ சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் மிகவும் பிரியமான பழங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவை அதிகரித்து வருகிறது.

பெங்களூரு சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களுடன் முன்னணியில் உள்ளது. மேலும், ஒருவர் மாம்பழங்களுக்காக ரூ.46,588 செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதையின் மோகனம்... அனுபமா!

ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதி

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து: 10 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்!

உடலும் உளமும் நலமே... நிகிதா!

காந்தாரா தெய்வ கதாபாத்திரங்களைச் சித்திரித்து மகத்துவத்தைக் கெடுக்காதீர்! -படக்குழு

SCROLL FOR NEXT