மக்களவைத் தேர்தலின் ஏழாம் கட்ட தேர்தலையொட்டி ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
மக்களவைத் தேர்தலின் ஏழு கட்டங்களில் ஆறு கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி ஜார்க்கண்டின் தும்காவில் பிற்பகல் 12:15 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், அதைத்தொடர்ந்து பிற்பகல் 2:30க்கு மேற்கு வங்கத்தின் பராசத் மற்றும் ஜாதவ்பூரில் மாலை 4:00 மணிக்கும் என இரண்டு பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
மேலும், வடக்கு கொல்கத்தாவில் மாலை 5.55 மணிக்கு பிரதமர் மோடி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் பேரணி தொடங்கும். அதன்பின்னர் இரவு 7.00 மணிக்கு சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.