கோப்புப்படம் 
இந்தியா

கேஜரிவாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார்: உச்ச நீதிமன்றம்

கேஜரிவாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

‘திடீரென குறைந்த உடல் எடை மற்றும் அதிக கீட்டோன் அளவுகள்‘ ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பிஇடி-சிடி ஸ்கேன் உள்பட பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தனது இடைக்கால ஜாமீனை ஏழு நாள்களுக்கு நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இவ்வழக்கை விசாரித்தை உச்ச நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிகள் அமர்வு முடிவு செய்வார்கள் என்றும், இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த முடியும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

கலால் கொள்கை ’ஊழலில்’ தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைதான முதல்வா் கேஜரிவாலுக்கு மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்வதற்காக கடந்த மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் 21 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

ஏழு கட்ட தோ்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த ஒரு நாள் கழித்து, ஜூன் 2 ஆம் தேதி கேஜரிவால் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT