இந்தியா

கேரளம்: படகு கவிழ்ந்து மீனவர் பலி

கேரளத்தில் உள்ள முதலப்பொழியில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.

DIN

கேரளத்தின் முதலப்பொழி பகுதியில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் இன்று (மே 28) பலியான நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் பலியானது தெரியவந்துள்ளது. ஆபிரகாம் உள்பட 4 பேர் ஃபைபர் படகில் மீன்பிடித்துவிட்டு துறைமுகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சீரற்ற காலநிலை காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டதுடன், பலத்த அலைகளால் படகு கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் மீனவர்கள் 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், ஆபிரகாம் பரிதாபமாக உயிரிழ்ந்தார். மற்றவர்கள் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​படகு ஒன்று நீர்த்தடுப்பு கல்லில் மோதி படகு கவிழ்ந்தது. படகில் இருந்த மீனவர் ஒருவர் கடலில் விழுந்தார். ஆனால், அவர் பாதுகாப்பாக நீந்தி கரைக்குச் சென்றார்.

''முதலப்பொழியில் இந்த ஆண்டு மட்டும், இதுவரை 12 விபத்துகள் நடந்துள்ளன. அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். துறைமுகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், கட்டுமானப் பணியின்மையே, அனைத்து விபத்துகளுக்கும் முக்கியக் காரணம்'' என மீனவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

மனதுக்கு குளிர்ச்சி... சாக்‌ஷி மலிக்!

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT