முகப்பு
இந்தியா

வெப்ப அலைக்கு மத்தியில் வெப்பத்தை தணித்த மழை!

நொய்டாவில் மழை பெய்துள்ளதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

Updated On : 29 மே, 2024 at 7:24 PM
பகிர்:
Updated On : 29 மே, 2024 at 7:00 PM

வட மாநிலங்களில் இதுவரை காணாத அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது.

வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், இன்றைய(மே 29) நிலவரப்படி, தலைநகர் தில்லியில் 50 டிகிரி செல்சியஸை தாண்டிவிட்டது வெப்பத்தின் அளவு. தில்லியில் உச்சபட்சமாக முங்கேஷ்புர் பகுதியில் 52.3 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

அண்டை மாநிலங்களான ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தின் ஓரிரு இடங்களிலும் 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.

Advertisement

Updated On : 29 மே, 2024 at 7:06 PM

இதனிடையே சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக நொய்டாவில் மழை பெய்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். தில்லி, அதன் புறநகர்ப் பகுதிகளான என்சிஆர் பகுதி, நொய்டாவில் இன்று (மே 29) மாலை மிதமான மழை பெய்துள்ளது.

Updated On : 29 மே, 2024 at 7:19 PM

தில்லியை பொறுத்தவரை வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிட இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், பிற பகுதிகளில் வெப்பநிலை சற்று குறைய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 31, ஜூன் 1 ஆகிய நாள்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், புழுதிக்ககாற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.