DOTCOM
இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் பட்டாசு விபத்து: பலர் காயம்!

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது விபத்து.

DIN

புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் பட்டாசு விபத்து ஏற்பட்டதில் புதன்கிழமை இரவு 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஒடிஸா மாநிலம், புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் திருவிழா நடைபெற்று வருகின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு கோயிலில் குவிந்திருந்தனர்.

அப்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், காயமடைந்த அனைவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மாநில முதல்வர் நவீன் பட்நாயக், “தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சையும் அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். சிகிச்சைக்கான முழு கட்டணமும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT