ANI
இந்தியா

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது!

கேரளத்தின் 11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட இரண்டு நாள்கள் முன்னதாக, இன்று(மே 30) கேரளம் மற்றும் வடமாநிலங்களில் தொடங்கியுள்ளது.

மேலும், வழக்கத்தைவிட இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளத்தில் ஜூன்1 -இல் தொடங்கும். இந்த பருவமழைதான் நாடு முழுவதும் மழை கொடுக்கும் நீராதாரமாக உள்ளது. நிகழாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை மையம் கணிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, பருவமழை இன்று காலை தொடங்கியதாக வானிலை மையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

கேரளம் முழுவதும் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வயநாடு, காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவக்காற்றும், வங்கக்கடல் காற்றும் சந்திக்கும் நிகழ்வு காரணமாக , இன்று முதல் ஜூன் 4 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT