ஷோரனூர் ரயில் விபத்து.  
இந்தியா

கேரளத்தில் விரைவு ரயில் மோதியதில் 4 தமிழர்கள் பலி

பாலக்காடு அருகே விரைவு ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பாலக்காடு அருகே விரைவு ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பால தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற விரைவு ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யூனஸ் சௌத்ரியின் அந்தரங்க விடியோவால் சர்ச்சை

பலியான தொழிலாளர்கள் சேலம் மாவட்டத்தைச் சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரது உடல் ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே ரயில் விபத்தில் பலியான 4 பேரும் ம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ரயில் வருவதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று ஷோரனூர் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

எதிர்நீச்சல் போடுபவர்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

SCROLL FOR NEXT