முகப்பு
இந்தியா

வயநாட்டில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் இன்று பிரசாரம்!

வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Updated On : 3 நவம்பர், 2024 at 4:48 AM
பகிர்:

வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் அடுத்த கட்ட பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.

தொடர்ந்து 5 நாள்கள் அவர் வயநாட்டில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது சகோதரியும், கட்சியின் வேட்பாளருமான பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வயநாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வயநாட்டில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இடதுசாரி முன்னணி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ரேபரேலி எம்.பி. பதவியை தக்கவைத்த ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து வயநாட்டில் தற்போது பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →